உண்மையைக் காப்பாற்றவும், மனசாட்சிக்கு விரோதமில்லாமல் பணியாற்றவும் நக்கீரன் காட்டிய மாவீரம் வியந்து போற்றத்தக்கது. ஆட்சியாளர்களின் தவறுகளை ஊசலாட்டம் இல்லாமல் அம்பலப்படுத்துவதே நக்கீரனிசம்'' -நீதியரசர் வி.ஆர். கிருஷ்ணய்யர்.
எத்தனை இழப்புகள் ஏற்பட்டாலும் அநீதிக்கு எதிரான தனது குரலை எவ்வித சமரசமுமின்றி ஒலித்துக் கொண்டிருக்கும் நக்கீரன் புலனாய்வு இதழியலில் தனி முத்திரையைப் பதிப்பது போலவே பதிப்பகத் துறையிலும் வருடந்தோறும் 100 க்கும் அதிகமான தலைப்புகளில் நூல்களை வெளியிட்டு சிறப்பான முத்திரையை தொடர்ந்து பதித்து வருகிறது.